Saturday, April 19, 2008

கவசம்

அன்பே...
தயவு செய்து உன் விழி
அம்புகளை என்மேல் வீசாதே!
தடுப்பதற்கு என்னிடம் கவசமில்லை...
இதயம் மட்டுமே உள்ளது!!!

Tuesday, April 1, 2008

வேறுபாடு

ஆசையுள்ள இறைநிலை
சத்தமுள்ள தவறுகள்
விருப்பமில்லா திருமணம்
காமமில்லா காதல்....
எதற்கும் உதவாது!!!

VAT...

விடிய விடிய விழித்து
வாழ்வின் நிலையை நினைத்து
திரவியம் தேட தவித்து

எல்லை வரை திரிந்து
சேர்த்த காசெல்லாம்

அமைதியாய் தின்று... அழித்தது VAT!?

சாதி

சாதியில்லை சாதியில்லை
என்ற நீயோ போய்விட்டாய்...
அந்தோ பரிதாபம்
சாதி சான்றிதல் கேட்கிறது பாரதியார் பல்கலைகழகம்!?

யாழ்...

நிலவின் ஒளியில்
தென்னம்கட்டிலின் மடியில்
யாழ் கடற்கரையில்
கொஞ்சும் தமிழ் மொழியில்

எப்போழுது
எங்கள் குழந்தைகள்
குறளை கேட்டு தூங்குமோ...

அப்பொழுது
வெடிகுண்டு சத்தமில்லா
மனிதம் வளர்ப்போம்!!!