Wednesday, May 29, 2013

யுத்தம் மரணம் கச்சாமி???

புத்தம் சரணம் கச்சாமி...யுத்தம் மரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி...அதர்மம் பின்னே கச்சாமி

எதையும் சொல்ல வார்த்தையின்றி
இதயம் வெடித்த மனிதனாய்
செயலற்று இருக்கிறோம்
நாகரீகம் போதித்த நாம் - இன்று
அடிமையாய் வீழ்ந்து போனோம்
சே வழி வந்த பிடெல் (Fidel Castro) கூட இதை
வக்காலத்து வாங்கும் அவலமும்
அமைதியை நிறைவேறியது

நம் குழந்தையின் மேனியில்
சிறு நக கீறல்கள் கண்டாலே
பதறி கண்ணீர் வார்ப்போம்
இன்றோ
எத்தனை பிஞ்சுகளை
ஓநாய்களும் பிணம்தின்னிகளும்
கசக்கி குதறி சிரிகின்றன?
பெண்களை சிதைக்கும் கொடியவிசமிகளும்
கோரப்பல்லோடு இளிக்கின்றன?

அன்று அடக்குமுறையை எதிர்த்து
தெற்கு வியட்நாம் புத்த பிக்கு
தன்னை எரித்து அன்பை போதித்தான்
ஒரு சிறுமி தன் இயலாமையை
நிர்வாணமாய் கதறி ஓடி
வியட்நாம் போரை நிறுத்தினாள்
உலக சரித்திரத்தையே
மாற்றிய புகைப்படத்தை போல்
எமது சரித்திரத்தை மட்டும்
எந்தப் புகைப்படமும் மாற்றவில்லையே!

இப்பொழுது ஏன் இந்த போராட்டம்?
நம் உரிமையை மீட்க, மானத்தை காக்க...
இன்றே உரக்கச் சொல்
தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு என்று...
மற்றபடி அடங்க மறு! அத்து மீறு!

No comments: